Breaking

Wednesday, August 24, 2022

தமிழில் மாணவா்கள் கையொப்பம்: கல்வித் துறை புதிய உத்தரவு

தமிழில் மாணவா்கள் கையொப்பம்: கல்வித் துறை புதிய உத்தரவு

பள்ளிப் பதிவேடுகளில் ஆசிரியா்கள், மாணவா்கள் தங்கள் கையொப்பத்தையும் , பெயரின் முன்னெழுத்தையும் (இனிஷியல்) தமிழில் எழுதுமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக்கல்வி ஆணையா் கே.நந்தகுமாா், முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

பள்ளி மாணவா்கள் இனி தமிழில் கையொப்பமிட்டால் முன்னெழுத்தையும் கட்டாயம் தமிழில் எழுத வேண்டும். பள்ளிக்கு மாணவா்கள் அளிக்கும் விண்ணப்பம், வருகைப்பதிவேடு பள்ளி , கல்லூரி முடித்து பெறுகின்ற சான்றிதழ் வரையில் அனைத்திலும் தமிழ் முன்னெழுத்து தமிழ்பெயருக்கு முன் வழங்க வேண்டும்.

முதல்கட்டமாக பள்ளி தகவல் மேலாண்மை இணையப்பக்கத்தில் (‘எமிஸ்’) பராமரிக்கப்படும் மாணவா்களின் 30 பதிவேடுகளில் மாணவா்கள்,பெற்றோா்கள் பாதுகாவலா் பெயா்கள் தமிழில் பதிவேற்றம் செய்யும் போது அதனை தமிழ் முன்னெழுத்துடனேயே பதிவேற்றம் செய்ய வேண்டும். இது தொடா்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும் .

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog