தமிழகத்தில் இருந்து ஓர் ஆசிரியர் மட்டுமே தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 26, 2022

Comments:0

தமிழகத்தில் இருந்து ஓர் ஆசிரியர் மட்டுமே தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

IMG-20220825-WA0021
தமிழகத்தில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள ஆசிரியர் கே.ராமச்சந்திரன்.

ராமநாதபுரம்: தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மட்டுமே தேர்வாகியுள்ளார்.

நாடு முழவதும் 46 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்திலிருந்து ஆறு ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். அதில் தமிழகத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியம் கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கே.ராமச்சந்திரன் ஒருவர் மட்டுமே தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வரும் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினத்தன்று டில்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, விருது வழங்க உள்ளார். தேசிய நல்லாசிரியர் விருது பெறுபவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், வெள்ளிப்பதக்கம், ரூ. 50,000-க்கான காசோலை ஆகியவை வழங்கப்படும் என மத்திய கல்வித்துறை தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84601551