நாளை சுதந்திர தின விழா வெளியாகுமா முக்கிய அறிவிப்புகள்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 14, 2022

Comments:0

நாளை சுதந்திர தின விழா வெளியாகுமா முக்கிய அறிவிப்புகள்?

On behalf of the Tamil Nadu government, Independence Day is going to be celebrated tomorrow. It is expected that the Chief Minister's Independence Day speech will include important announcements including reduction of liquor shops.

On behalf of the Government of Tamil Nadu, Independence Day is being celebrated tomorrow at Fort Kothalam in Chennai. Elaborate arrangements have been made for this. For two years, the general public was not allowed in the Independence Day celebrations due to Corona. Marching forces were reduced in number.

This year the general public is allowed to participate. Regular team classes are held. The President's special flag given to the Tamil Nadu Police Department is to take place in this year's Independence Day parade. At 9:00 am, Chief Minister Stalin, Police, NCC, National Welfare Project students accepted the honor of the parade at the Fort Kothalam, National Palace. He is about to hoist the flag.

After that, he will deliver his Independence Day address. A few days ago, the Chief Minister launched the 'Drug Free Tamil Nadu' project. Subsequently, the demand to close the 'Tasmac' shops is getting stronger. Therefore, there is an expectation that an announcement regarding the reduction of liquor shops will be made in the Chief Minister's speech on the Independence Day.

Also, since it is the 75th year of Independence Day, it is expected that the Chief Minister will make many new announcements. On the occasion of Independence Day, important government offices, including the Chief Secretariat, are lit up with tricolor lights.

Manimandam for Vaidyanatha Iyer in Madurai?

The Heirs of Tamil Nadu Freedom Struggle Martyrs Organization has insisted that 'the amount of assistance given to freedom struggle martyrs should be increased by 5,000 rupees'.

Its leader, Vijayaraghavan, has sent a petition to the Chief Minister: A Mani Mandapam should be constructed in Madurai for martyr Vaidyanatha Iyer, who led the downtrodden people into the temple of Madurai Meenakshi Amman temple. The bust of Theerar Satyamurthy in Simmakkal area of ​​Madurai should be replaced with a full-length bronze statue.

The amount of assistance given to the martyrs of the freedom struggle should be increased by another 5,000 rupees. To provide representation to heirs of martyrs in government boards and commissions. It says so.

தமிழக அரசு சார்பில், நாளை சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. முதல்வரின் சுதந்திர தின விழா உரையில், மதுக்கடைகள் குறைப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில், சென்னை கோட்டை கொத்தளத்தில், நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளாக, கொரோனா காரணமாக, சுதந்திர தின விழாவில், பொது மக்கள் அனுமதிக்கப்பட வில்லை. அணிவகுப்பு படைகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டன.

இந்த ஆண்டு பொது மக்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமான அணி வகுப்புகள் இடம்பெற உள்ளன. தமிழக காவல் துறைக்கு வழங்கப்பட்டுள்ள, ஜனாதிபதியின் சிறப்புக் கொடி, இந்த ஆண்டு சுதந்திர தின விழா அணிவகுப்பில் இடம் பெற உள்ளது.காலை 9:00 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின், போலீசார், என்.சி.சி., நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, கோட்டை கொத்தளத்தில், தேசியக் கொடியேற்ற உள்ளார்.

அதன்பின், சுதந்திர தின உரையாற்றுவார். 'போதைப் பொருட்கள் இல்லாத தமிழகம்' திட்டத்தை சில தினங்களுக்கு முன், முதல்வர் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, 'டாஸ்மாக்' கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.எனவே, சுதந்திர தின விழா முதல்வர் உரையில், மதுக்கடைகள் குறைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அத்துடன் 75ம் ஆண்டு சுதந்திர தின விழா என்பதால், பல புதிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சுதந்திர தின விழாவையொட்டி, தலைமைச் செயலகம் உட்பட, முக்கிய அரசு அலுவலகங்கள், மூவர்ணத்தில் ஜொலிக்கும் வகையில், மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

வைத்தியநாத அய்யருக்கு மதுரையில் மணிமண்டம்?

'சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை, மேலும் 5,000 ரூபாய் உயர்த்தி தர வேண்டும்' என, தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

அதன் தலைவர் விஜயராகவன், முதல்வருக்கு அனுப்பி உள்ள மனு:மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள், தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்று ஆலயப் பிரவேசம் நடத்திய, தியாகி வைத்தியநாத அய்யருக்கு, மதுரையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள, தீரர் சத்தியமூர்த்தி மார்பளவு சிலையை மாற்றி, முழு உருவ வெண்கலச் சிலை அமைக்க வேண்டும்.

சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை, மேலும் 5,000 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும். அரசு வாரியங்கள் மற்றும் ஆணைய பொறுப்புகளில், தியாகிகளின் வாரிசுகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews