ஊக்க ஊதிய உயர்வு சார்ந்து வழக்குகள் தொடர்ந்து "Stay of Recovery Alone" என குறிப்பிடப்பட்டுள்ள வழக்குகள் சார்ந்தவர்களுக்கு மட்டும் ஊதியத்தை திருத்தியமைக்க பள்ளிக் கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 30, 2022

Comments:0

ஊக்க ஊதிய உயர்வு சார்ந்து வழக்குகள் தொடர்ந்து "Stay of Recovery Alone" என குறிப்பிடப்பட்டுள்ள வழக்குகள் சார்ந்தவர்களுக்கு மட்டும் ஊதியத்தை திருத்தியமைக்க பள்ளிக் கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் உத்தரவு

பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் கீழுள்ள பல்வேறு அலுவலகங்களிலும் ஊக்க ஊதிய உயர்வு தணிக்கைத் தடை நிலுவைத் தொகை சார்ந்து, தொடரப்பட்டு நிலுவையிலுள்ள பல்வேறு வழக்குகளில் "Stay of recovery alone" என குறிப்பிடப்பட்டுள்ள வழக்குகள் சார்ந்து மட்டும், தனியருக்கு தகுதிவாய்ந்த ஊதியத்தினை திருத்தியமைத்து அடுத்துவரும் மாதங்களில் திருத்தப்பட்ட ஊதியத்தினை வழங்கிட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு, ஊதியம் திருத்தியமைக்கப்பட்ட வழக்குகள் சார்ந்த விவரங்களை கல்வி மாவட்டம் வாரியாக இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் 31.08.2022 க்குள் உடன் இவ்வலுவலகத்திற்கு தெரிவித்திடவும் அறிவுறுத்தப்படுகிறது.

தணிக்கைத் தடை சார்ந்த விவரங்கள் தனியரின் பணிப் பதிவேடுகளில் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும் என சார்ந்த பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இதனை ஆண்டாய்வுகளின் போதும் ஆய்வு செய்திடவும், தணிக்கைத்தடை அறிக்கை மீது அவ்வப்போது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் ஆய்வு அலுவலர்களுக்கும், பணம் பெற்று வழங்கும் அலுவலருக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

இணைப்பு படிவம்

IMG_20220830_181706
IMG_20220830_181654

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84601575