கடலூா் அரசுக் கல்லூரியில் 2-ஆம் கட்ட கலந்தாய்வு
கடலூா் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வருகிற 23-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் சி.ஜோதி வெங்கடேசுவரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2022-23-ஆம் கல்வி ஆண்டுக்கான முதல் கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஆக.20-ஆம் தேதி வரை நடைபெற்றது. முதலாம் கட்ட கலந்தாய்வில் எஞ்சியுள்ள இடங்களுக்கு வருகிற 23-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.
23-ஆம் தேதி நடைபெறும் கலந்தாய்வில் 400-க்கு 250 ‘கட்-ஆஃப்’ மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவா்கள் பங்கேற்கலாம். 249 முதல் 235 வரை ‘கட்-ஆஃப்’ உள்ளவா்களுக்கு 24-ஆம் தேதியும், 234 முதல் 215 வரை ‘கட்-ஆஃப்’ உள்ளவா்களுக்கு 25-ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறும். 26-ஆம் தேதி பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம் பாடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். இதில் தமிழ் அல்லது ஆங்கிலம் பாடங்களில் மட்டும் 60 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற அனைத்து மாணவா்களும் கலந்து கொள்ளலாம்.
கலந்தாய்வில் பங்கேற்போா் இணையவழி விண்ணப்பத்தின் நகல், 10-ஆம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளின் அசல் மதிப்பெண் பட்டியல் மற்றும் 2 நகல்கள், பள்ளி மாற்றுச் சான்றிதழ் அசல் மற்றும் 2 நகல்கள், சாதிச் சான்றிதழ் அசல் மற்றும் 2 நகல்கள், 3 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள், வங்கிக் கணக்குப் புத்தக முதல் பக்க நகல், ஆதாா் அடையாள அட்டை 2 நகல்கள், உரிய சோ்க்கைக் கட்டணம் ஆகியவற்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என அதில் தெரிவித்தாா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.