Spam அழைப்புகளை நிரந்தரமாக தடுக்க உங்கள் போனில் ஒரே ஒரு Settings மாற்றினால் போதும். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 26, 2022

Comments:0

Spam அழைப்புகளை நிரந்தரமாக தடுக்க உங்கள் போனில் ஒரே ஒரு Settings மாற்றினால் போதும்.

Spam Calls | ஸ்பேம் அழைப்புகளை எளிதில் நிரந்தரமாக நிறுத்த உங்கள் மொபைலில் உள்ள ஒரு முக்கிய செட்டிங்ஸை மாற்றினால் போதும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். இதை பற்றி இனி விரிவாக பார்க்கலாம்

விளம்பரங்கள் சார்ந்தோ, தவறான நபர்களிடம் இருந்தோ வர கூடிய ஸ்பேம் அழைப்புகளை யார் தான் விரும்புவார்கள்.? இப்படிப்பட்ட தொல்லை நிறைந்த ஏராளமான ஸ்பேம் அழைப்புகள் தினம்தோறும் நம்மை தொல்லை செய்தபடி வந்து கொண்டே இருக்கும். இவற்றினால் நமக்கு எரிச்சலும், நேர விரையுமுமே அதிகம் உண்டாகும். இந்த வகை ஸ்பேம் அழைப்புகளை தடுக்க வழியே இல்லையா என்று நினைப்போருக்கு தான் இந்த பதிவு. ஆம், ஸ்பேம் அழைப்புகளை எளிதில் நிரந்தரமாக நிறுத்த உங்கள் மொபைலில் உள்ள ஒரு முக்கிய செட்டிங்ஸை மாற்றினால் போதும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். இதை பற்றி இனி விரிவாக பார்க்கலாம். ஸ்பேம் அழைப்புகள்

மூன்று வகையான மோசடி ஸ்பேம் அழைப்புகள் உள்ளன. ஒன்று டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள், இரண்டாவது ரோபோ அழைப்புகள் மற்றும் மூன்றாவது மோசடி அழைப்புகள். இந்த மூன்று வகையான அழைப்புகளும் எரிச்சலூட்டும் வகையிலும் மற்றும் சில சமயங்களில் பயமுறுத்தும் வகையிலும் இருக்க கூடும். கொரோனா தொற்றுநோய் காலத்தின் போது அதிக அளவில் இந்த ஸ்பேம் அழைப்புகள் வந்ததாக சில ஆய்வுகள் கூறுகின்றன. ​​இதுபோன்ற ஸ்பேம் அழைப்புகளிலிருந்து விடுபட விரும்பினால், அதற்கான நிரந்தர வழி உள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இதில் இருந்து விடுபட ஒரு வழிகள் உள்ளது.

ஆண்ட்ராய்டு பயன்படுத்த கூடிய பயனர்களுக்கு ஸ்பேம் அழைப்புகளிலிருந்து பாதுகாக்கும் இரண்டு அம்சங்களை கூகுள் நிறுவனம் வழங்குகிறது. இந்த அம்சங்களில் அழைப்பாளர் ஐடி மற்றும் ஸ்பேம் பாதுகாப்பு ஆகியவை அடங்கும். இந்த இரண்டு அம்சங்களும் ஆண்ட்ராய்டு ஃபோன்களில் இயல்பாகவே பொருத்தப்பட்டு இருக்கும். இதைப் பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் ஆஃப் செய்தும் கொள்ளலாம். ​​இந்த அம்சங்களை பற்றிய படிப்படியான வழிகாட்டி இதோ. தடுக்கும் முறை

முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் ஃபோன் ஆப்-ஐ திறக்கவும். இதில் "More" என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யவும். பிறகு செட்டிங்ஸ் பட்டனை டேப் செய்ய வேண்டும். இதில் ஸ்பேம் மற்றும் கால் ஸ்கிரீன் ஆப்ஷனை கிளிக் செய்யவும். இறுதியாக 'காலர் மற்றும் ஸ்பேம் ஐடி' ஆப்ஷனை ஆன் செய்து கொள்ளவும். ஒரு வேளை இந்த ஆப்ஷன் உங்களுக்கு வேலை செய்யவில்லை என்றால், ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களுக்கு வரக்கூடிய ஸ்பேம் அழைப்புகளை ஸ்பேம் என்று குறித்து வைக்கலாம்.

இதை ஆக்டிவேட் செய்ய உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் ஃபோன் ஆப்-ஐ திறக்கவும். அடுத்து கீழே உள்ள சமீபத்திய டேப் என்பதை கிளிக் செய்யவும். இப்போது, ​​நீங்கள் ஸ்பேம் என புகாரளிக்க விரும்பும் அழைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் பிளாக் அல்லது ரிப்போர்ட் ஸ்பேம் ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளலாம். இந்த இரண்டு ஆப்ஷன்களும் உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

எனவே, மேற்சொன்ன வழிகளை பயன்படுத்தி ஸ்பேம் அழைப்புகளில் இருந்து தப்பித்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews