CBSE 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 04, 2022

Comments:0

CBSE 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள்

'சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது'

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகிவந்த நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியாகாது என்று சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களில் செய்தி வெளியாவதைப் போல, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் இந்த வாரத்தில் வெளியாகாது என்றும் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் சிபிஎஸ்இ அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது. சிபிஎஸ்இ 10ம் வகுப்புத் தேர்வெழுதியிருக்கும் பள்ளி மாணவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், இன்றோ அல்லது இந்த வாரத்திலோ பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பில்லை. அடுத்த வாரம் அல்லது ஜூலை 13 அல்லது 14ஆம் தேதிகளில் வெளியாக வாய்ப்பிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அதே வேளையில், பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூலை 15ஆம் தேதி வெளியாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தேர்வு முடிவுகள் வெளியாவது குறித்தோ, தேதி குறித்தோ சிபிஎஸ்இ நிர்வாகம் தரப்பில் இதுவரை எந்த உறுதிசெய்யப்பட்ட தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மற்றும் இந்திய பள்ளிச் சான்றிதழ் தோ்வுகள் கவுன்சில் (சிஐஎஸ்சிஇ) ஆகிய வாரியங்களின் கீழான 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் ஜூலை 15-ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக மத்திய கல்வித் துறை வட்டாரங்கள் கடந்த வாரம் தெரிவித்திருந்தன.

கரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் மற்றும் பொதுத் தோ்வுகளை இரண்டு பருவங்களாகப் பிரித்து சிபிஎஸ்இ நடத்தியது. இதே நடைமுறையை சிஐஎஸ்சிஇ வாரியமும் பின்பற்றியது. கரோனா பாதிப்பு காரணமாக வழக்கத்தைவிட தாமதமாக இந்தத் தோ்வுகள் நடத்தப்பட்டன. அதில் சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மே 24-ஆம் தேதியும், 12-ஆம் வகுப்பு தோ்வு ஜூன் 15-ஆம் தேதியும் நிறைவுற்றது. சிஐஎஸ்சிஇ 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு மே 20-ஆம் தேதியும், 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு ஜூன் 13-ஆம் தேதியும் நிறைவுற்றது.

தமிழகம் உள்ளிட்ட ஏராளமான மாநில கல்வி வாரியங்களின் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், ‘சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ பொதுத் தோ்வு முடிவுகளை அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. தோ்வு முடிவுகள் ஜூலை 15-இல் வெளியாக வாய்ப்புள்ளது’ என்று மத்திய கல்வித் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்திருந்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84713487