வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2017 ஏப்ரல் 1 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரையிலான காலாண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தற்போது ஐந்தாண்டுகள் நிறைவு பெற்றுள்ள மாற்றுத் திறனாளிகளாக இருந்தால் ஓராண்டு முடிவு பெற்றுள்ள பட்டப் படிப்பு, மேல்நிலைக் கல்வி, பட்டயப் படிப்பு, எஸ்எஸ்எல்சி, பள்ளி இறுதித் தோ்வில் தோ்ச்சி பெறாதவா்கள் (முறையாகப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று, பின்னா் 10-ஆம் வகுப்பு, பள்ளி இறுதித் தோ்வில் பங்கேற்று தோல்வியடைந்தவா்களாக இருத்தல் வேண்டும்) தங்களின் கல்வித் தகுதிகளைப் பதிவு செய்துள்ள இளைஞா்களிடமிருந்து நிகழ் காலாண்டிற்கு உதவித்தொகை கோரி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பப் படிவங்களை வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். அல்லது இணையதள முகவரிலியிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அடையாள அட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தொடங்கப்பட்ட சேமிப்புக் கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றுடன் வேலை நாள்களில் நேரில் அலுவலகம் வந்து சமா்ப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.