நீட் தேர்வு எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப் எவ்வளவு? மீண்டும் தேர்வு எழுதலாமா? அல்லது வேறு படிப்புகளை தேர்வு செய்யலாமா? கல்வியாளர் விளக்கம்
நீட் தேர்வில் சிறப்பாக செயல்படாத மாணவர்கள் என்ன செய்யலாம்? அடுத்த நீட் தேர்வுக்கு தயாராகலாமா? அல்லது வேறு படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாமா? இதுபோன்ற கேள்விகளுக்கு கல்வியாளரின் விளக்கத்தை இப்போது பார்ப்போம்.
நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வு சற்று எளிதாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் இயற்பியல் மற்றும் வேதியியல் பிரிவு வினாக்கள் விடையளிக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக மாணவர்கள் கூறியுள்ளனர். தமிழக மாணவர்களைப் பொறுத்தவரை, இயற்பியல் மற்றும் வேதியியல் பகுதி வினாக்கள் விடையளிக்க சற்று கடினமாக இருந்ததாக கூறினார். இதனையடுத்து, தேர்வில் சிறப்பாக செயல்படாத மாணவர்கள் அடுத்து என்ன என்று யோசிக்கத் தொடங்கியுள்ளனர். சிலர் அடுத்த நீட் தேர்வுக்கு தயாராகலாம் என்றும், சிலர் பொறியியல் படிப்புகளைத் தேர்வு செய்யலாம் என்றும், சிலர் மருத்துவம் சார்ந்த படிப்புகளைப் படிக்கலாம் என்றும் திட்டமிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், நீட் தேர்வில் சிறப்பாக செயல்படாத மாணவர்கள் என்ன செய்யலாம் என கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களை பொறுத்தவரை, பொதுப் பிரிவினருக்கு 585-590, BC பிரிவினருக்கு 540-550, MBC பிரிவினருக்கு 520-510, SC பிரிவினருக்கு 430-450 என்ற அளவில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதற்கு குறைவாக மதிப்பெண்கள் வரும் மாணவர்கள், குறைந்தபட்சம் 375-400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து இருந்து, எம்.பி.பி.எஸ் தான் உங்கள் லட்சியம் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி தான் வேண்டும் என்றால், மீண்டும் நீட் தேர்வு எழுதலாம். அதேநேரம் 300 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்றவர்கள், மீண்டும் முயற்சி செய்தால் வெற்றி கிடைக்குமா என்பதை யோசித்து செயல்படுங்கள்.
அதேநேரம் வேறு படிப்புக்கு செல்ல நினைப்பவர்கள், பொறியியல் படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம். விரும்பினால் நீங்கள் பயோ மெடிக்கல், பயோ டெக்னாலஜி போன்ற படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
பொறியியல் படிப்புகளை விரும்பாத மாணவர்கள், கால்நடை மருத்துவம் மற்றும் மீன்வளம் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுக்கலாம். இதற்கு அடுத்தப்படியாக, நீட் தேர்வு இல்லாத இந்திய மருத்துவ படிப்பான, இளங்கலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பை தேர்வு செய்யலாம். ஏனெனில் பிற இந்திய மருத்துவ படிப்புகளான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி போன்ற படிப்புகளுக்கு நீட் மதிப்பெண் அவசியம்.
அதேநேரம், எம்.பி.பி.எஸ் கிடைக்காத அதேநேரம், தேவையான நீட் மதிப்பெண் உள்ளவர்கள் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி போன்ற படிப்புகளை தேர்வு செய்யலாம்.
இது தவிர மருத்துவம் சார்ந்த படிப்புகளான கண் மருத்துவம், ஸ்பீச் அண்ட் ஆடியாலஜி, பி.பார்ம் ஆகியவற்றையும், விரும்பினால் நர்சிங் மற்றும் பிஸியோதெரபி படிப்புகளையும் தேர்வு செய்யலாம்.
நீட் தேர்வுக்கு மீண்டும் முயற்சிக்க விரும்புபவர்கள் நன்றாக பயிற்சி எடுத்து, அடுத்தமுறை நிச்சயம் வெல்ல முயற்சியுங்கள். ஒருமுறைக்கு மேல் மீண்டும் நீட் தேர்வுக்கு முயற்சிக்காமல், வேறு படிப்புகளை தேர்ந்தெடுப்பது சிறந்தது. இவ்வாறு ஜெயபிரகாஷ் காந்தி கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.