முதல் நாளே ஆசிரியர்கள் தாமதம்; காத்திருந்து வீடு திரும்பிய மாணவர்கத்ள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 14, 2022

Comments:0

முதல் நாளே ஆசிரியர்கள் தாமதம்; காத்திருந்து வீடு திரும்பிய மாணவர்கத்ள்

Disappointed students returned home as the school was not open till 9:00 am near Villupuram. Next to Villupuram is the Panchayat Union Primary School. The school has five teachers, including Arulmalar as the head teacher; 109 students are studying. Schools were reopened yesterday after the summer holidays.

Prior to that, guidelines had been announced for teachers. Teachers, including the head teacher, must keep the school open by 8:30 p.m. The Department of Education had advised that students coming to the school should be welcomed as per the Corona guidelines.However, the Poyapakkam school was not open till 9:00 am. The students, who came to the school eagerly from 8:30 am, waited for more than half an hour as the entrance gate was locked.

Some students returned home. At 9:10 a.m., the headmaster, Arulmalar, opened the school. After that at 9:15 am the other teachers came one by one. The teachers, knowing that some students had come and gone back to the school, informed the students about the opening of the school and brought them back. Ordered to give explanation.
விழுப்புரம் அருகே 9:00 மணி வரை பள்ளி திறக்கப்படாததால், காத்திருந்து ஏமாற்றம் அடைந்த மாணவர்கள் வீடு திரும்பினர்.விழுப்புரம் அடுத்த பொய்யப்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், தலைமை ஆசிரியையாக அருள்மலர் உட்பட, ஐந்து ஆசிரியர்கள் உள்ளனர்; 109 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

அதற்கு முன்பே, ஆசிரியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்தன.தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியர்கள் காலை 8:30 மணிக்குள் பள்ளியை திறந்து வைக்க வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்களை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் படி வரவேற்க வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது.ஆனால், பொய்யப்பாக்கம் பள்ளி காலை 9:00 மணி வரை திறக்கப்படவில்லை. காலை 8:30 மணி முதல் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த மாணவ - மாணவியர் நுழைவு வாயில் பூட்டியிருந்ததால், அரை மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்தனர்.

சில மாணவர்கள் வீடு திரும்பினர்.காலை, 9:10 மணிக்கு தலைமை ஆசிரியை அருள்மலர், பள்ளியை திறந்தார். அதன் பிறகு 9:15 மணிக்கு பிற ஆசிரியர்கள் ஒவ்வொருவராக வந்தனர்.சில மாணவர்கள் பள்ளிக்கு வந்து திரும்பிச் சென்றதை அறிந்த ஆசிரியர்கள், பள்ளி திறக்கப்பட்ட தகவலை மாணவர்களுக்கு தெரிவித்து, மீண்டும் அழைத்து வந்தனர்.தகவலறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி எச்சரித்தார்; விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews