1 முதல் 12-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு - பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 16, 2022

Comments:0

1 முதல் 12-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு - பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

1 முதல் 12-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு - பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

1 முதல் 12ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Training-class-for-teachers-of-1st-to-12th-class--Department-of-School-Education
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

1 முதல் 12ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வரும் 18ஆம் தேதி தகவல் தொடர்பு, தொழில்நுட்பம், மாணவர்களின் உடல்நலன், மனநலன் சார்ந்த பயிற்சி வகுப்பு நடைபெறும். அனைத்து ஆசிரியர்களும் பயிற்சி வகுப்புகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.

மாணவர்களுக்கு ஒரு வாரம் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வரும் நிலையில், நவீன தொழில்நுட்பங்களைக் கையாளுதல், மின்னணு பதிவேடுகளைப் பராமரித்தல், மாணவர்களின் மனநலன் அறிந்து செயல்படுதல் உள்ளிட்டவற்றுக்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84696197