பள்ளி நுாலகங்களுக்கு வருகிறது தனி செயலி
'அனைத்து பள்ளி நுாலகங்களிலும் உள்ள புத்தகங்களை தெரிந்து கொள்ள, தனி செயலி உருவாக்கப்படும்' என்று, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையில் கூறியிருப்பதாவது:
பள்ளி மாணவர்களை சிந்தனையாளர்களாக உருவாக்க நுாலகங்கள் பயன்படுகின்றன. ஒவ்வொரு பள்ளியிலும், நுாலக வசதியை ஏற்படுத்தி, ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு நுாலக நிதி ஒதுக்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், 31.96 கோடி ரூபாய்க்கு புதிய புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த புத்தகங்களை பயன்படுத்தி, மாணவர்கள் வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த, ஒவ்வொரு வாரமும் பள்ளிகளில் நுாலக பாடவேளை ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில், அனைத்து பள்ளி நுாலகங்களிலும், என்னென்ன புத்தகங்கள் உள்ளன என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ள தனி செயலி உருவாக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.