மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் - தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை (Hall Ticket) பதிவிறக்கம் செய்தல் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 21, 2022

Comments:0

மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் - தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை (Hall Ticket) பதிவிறக்கம் செய்தல் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6 - மே 2022, மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் பள்ளி மாணவர்களுக்கான +1 & +2 தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை (Hall Ticket) பதிவிறக்கம் செய்தல் - அறிவுரைகள் - சார்பு.

IMG_20220421_150617
நடைபெறவுள்ள மே 2022, மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பாக, பள்ளி தலைமையாசிரியர்கள் 22.04.2022 பிற்பகல் 2.00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று “online-portal" என்ற வாசகத்தினை "Click" செய்து “"HIGHER SECONDARY FIRST YEAR / SECOND YEAR EXAM MAY 2022" என தோன்றும் பக்கத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID, Password-ஐ கொண்டு தங்கள் பள்ளி மாணவர்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை (Hall Tickets) பதிவிறக்கம் செய்தல் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் தவறாமல் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதற்கு அனைத்து தலைமையாசிரியர்கள் ஒத்துழைப்பு அளிக்க அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84648452