பொது இடங்களுக்கு வரும் போது மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அதிகரிப்பு
தமிழகத்தில் கோவிட் பரவல் குறைந்து வரும் நிலையில், சென்னை ஐ.ஐ.டி.,யில் 12 மாணவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால், மாணவர்கள், ஆசிரியர்கள் என 2 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், மேலும் 18 பேருக்கு கோவிட் உறுதியானது. இதனால், ஐ.ஐ.டி.,யில் கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
உத்தரவு
இதனையடுத்து இன்று(ஏப்.,22) மீண்டும் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், சென்னை ஐ.ஐ.டி.,யில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தற்போது வரை 30 பேர் கோவிட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொது இடங்களுக்கு வரும் பொது மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இனியும் காலம் தாழ்த்தாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பரிசோதனை
முன்னதாக , சென்னையில் நிருபர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது; இந்தியா மட்டுமல்ல, சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் கோவிட் தொற்று அதிகரித்து வருகிறது. சென்னை ஐஐடி.,யில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் வட மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். வட மாநிலங்களில் இருந்து தொழில் செய்ய வந்தவர்களுக்கே கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. டில்லி, உ.பி., ஹரியானா மாநிலங்களில் கோவிட் பரவல் அதிகரித்து வருகிறது. வட மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் கோவிட் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வரும் 8 ம் தேதி மீண்டும் மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் ஒரு லட்சம் இடங்களில் நடத்தப்படும். காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடத்தப்படும் இந்த முகாமை, 2வது டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளாத 1.46 கோடி பேர் பயன்படுத்தி கொள்ளலாம். தடுப்பூசி என்பது அவசியம் என்பதை அனைவரும் உணர வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.