பழைய ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி
கரூரில் ஆசிரியர் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
மாநில பொதுத்துறை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரி யர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர், மார்ச் 29: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய, மாநில பொதுத்துறை மற்றும் ஆசிரியர் சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுப்ரமணி தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜெயராஜ் வரவேற்றார். நிர்வாகிகள் அன்பழகன், கண்ணன், செல்வ ராணி, ஜெயவேல் காந்தன் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் நிர்வாகி ரகு, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் ஷகிலா உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேசினர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசுத்து றைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வது தடுக்க வேண்டும். ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.