வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள்: கலெக்டர் தகவல்
திருவள்ளுர்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட அறிக்கை: இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்காளர் விழிப்புணர்வுப் போட்டிகள் மாவட்டத்தில் நடத்தப்பட உள்ளது. மக்களாட்சியில் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது என்ற கருப்பெருளை மையமாக கொண்டு மக்களின் ஏராளமான படைப்புகளை வரவேற்கிறது. இதில் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். போட்டிகளின் விவரம்: 1. வினாடி வினா போட்டி, 2. வாசகம் எழுதும் போட்டி, 3.பாட்டுப்போட்டி (3 நிமிடங்கள் மட்டும்), 4. காணொலிக்காட்சி தயாரிக்கும் போட்டி, 5. விளம்பரப்பட வடிவமைப்புப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதற்கு பரிசுத்தொகையாக ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும். பங்கேற்பாளர்கள் போட்டியின் விரிவான வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை http://ecisveep.nic.in/contest/ என்ற வலைதளத்தில் பார்வையிடலாம். மேலும் போட்டி தொடர்பான அனைத்து பதிவுகளும் பங்கேற்பாளர்களின் விவரங்களுடன் இணைத்து மார்ச் 15ம் தேதிக்குள் voter-contest@eci.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.