TNPSC - துறைத்தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் புதிய நடைமுறை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 16, 2022

Comments:0

TNPSC - துறைத்தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் புதிய நடைமுறை!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய நேர்முக கடிதத்தில் , மே -2021 ல் நடத்தப்பட்ட துறைத்தேர்வு முடிவுகள் குறித்து அரசிதழ் bulletin வாயிலாக தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியிடப்படும் எனவும் , இனி தமிழ்நாடு தேர்வாணைய துறைத்தேர்வு முடிவு வெளியீடுகளை ( அரசிதழ் ) அச்சிட்டு வெளியிடுவது என்பது கைவிடப்படுகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே இணையதள வெளியீட்டினை ஆதாரமாக ( authenticated Document ) கொண்டு தகுதிகாண் பருவம் விளம்புதல் , பதவி உயர்வுகள் போன்றவற்றை பணியாளர்களின் பணிப்பதிவேடுகளில் பதிவுகள் மேற்கொள்ள ஏதுவாக , தேர்வாணைய இணையதள வெளியீட்டு முடிவுகளை e - bulletin அங்கீகரிக்கப்பட்ட ஆதாரமாக ( authenticated Document ) கொள்ளலாம் என்றும் பார்வையில் காணும் நேர்முக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது . பணிப்பதிவேட்டில் துறைத்தேர்வு தேர்ச்சி விவரங்கள் குறித்து பதிவுகள் மேற்கொள்ள தற்போது பெயர் / தகப்பணர் பெயர் / பிறந்ததேதி / முகவரி / பதிவெண் ஆகிய அனைத்து விவரங்களுடன் அரசிதழ் ( e - bulletin ) ஒருங்கே வெளியிடப்படுவதால் தேர்வாணைய நுழைவுச் சீட்டு கோரி பணியாளர்களை வற்புறுத்தக் கூடாது என்றும் , நுழைவுச் சீட்டு இருப்பின் அதனை பரிசீலனை செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நேர்வில் , பணியாளர்கள் தாயலகு மாவட்டத்தை தவிர்த்து இதர காரணங்களுக்காக பிற மாவட்டங்களில் துறைத்தேர்வு எழுதும் பட்சத்தில் அப்பணியாளர்கள் மட்டும் நுழைவுச்சீட்டினை உரிய அலுவலர்களிடம் சமர்ப்பிக்கவேண்டும் என அனைத்து பணியாளர்களுக்கும் தெரிவித்து தங்களது நிலையில் சுற்றறிக்கை அனுப்பி , அச்சுற்றறிக்கையின் சார்வு நகலினை சம்மந்தப்பட்ட பணியாளர்களிடம் பெறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews