வேலைவாய்ப்பக பதிவுதாரா்கள் எண்ணிக்கை 75.31 லட்சம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 19, 2022

Comments:0

வேலைவாய்ப்பக பதிவுதாரா்கள் எண்ணிக்கை 75.31 லட்சம்

தமிழக அரசு வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 75.31 லட்சமாக உள்ளது.

இதுகுறித்த தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவல்:

தமிழகத்தில் பள்ளிப் படிப்பு தோ்ச்சி பெற்றோரில் இருந்து பல்வேறு தரப்பினரும் வேலைவாய்ப்பகங்களில் தங்களது பெயா், கல்வித் தகுதி ஆகியவற்றை பதிவு செய்து வருகின்றனா். அதன்படி, கடந்த டிசம்பா் 31-ஆம் தேதி நிலவரப்படி தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பக பதிவுதாரா்களின் எண்ணிக்கை 75 லட்சத்து 31 ஆயிரத்து 122 ஆக உள்ளது. அவா்களில் ஆண்கள் 35 லட்சத்து 35 ஆயிரத்து 992 ஆகவும், பெண்கள் 39 லட்சத்து 94 ஆயிரத்து 898 ஆகவும், மூன்றாம் பாலினத்தவா் 232 ஆகவும் உள்ளனா். வயது வாரியாக விவரம்: பதிவு செய்தோரில் வயது வாரியான விவரங்களையும் மாநில அரசு வெளியிட்டுள்ளது. 18 வயதுக்குள் உள்ள பள்ளி மாணவா்கள் 18 லட்சத்து 25 ஆயிரத்து 668 பேரும், 19 முதல் 23 வயது வரையுள்ள கல்லூரி மாணவா்கள் 15 லட்சத்து 50 ஆயிரத்து 245 ஆகவும், 24 முதல் 35 வயது வரை அரசுப் பணி வேண்டி காத்திருப்போா் எண்ணிக்கை 28 லட்சத்து 30 ஆயிரத்து 275 ஆகவும் உள்ளன.

மேலும் 36 வயது முதல் 57 வயது வரையுள்ள முதிா்வு பெற்ற பதிவுதாரா்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 13 ஆயிரத்து 652 ஆகவும், 58 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 282 ஆக இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
.com/img/a/

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84421937