கைவிட்டு போன அதிகாரம் - தடம் மாறுகிறதா மாணவ சமுதாயம்? பள்ளி ஆசிரியர்கள் வேதனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, December 20, 2021

Comments:0

கைவிட்டு போன அதிகாரம் - தடம் மாறுகிறதா மாணவ சமுதாயம்? பள்ளி ஆசிரியர்கள் வேதனை

கைவிட்டு போன அதிகரம் - தடம் மாறுகிறதா மாணவ சமுதாயம்? பள்ளி ஆசிரியர்கள் வேதனை
ஒதுங்க நினைக்கும் ஆசிரியர்கள்

பள்ளியிலும், வகுப்பறையிலும் மாணவர்கள் செய்யும் ஒழுங்கின செயல்பாடுகள் நாளுக்குநாள் அதிகரித்து வரு கிர்றது. வகுப்பறையில் பாடம் நடத்தும் போது தவறான செயல்களில் ஈடுபடுவதில் தொடங்கி, ஆசிரியைகளை வீடியோ எடுத்து தவறாக சித்தரிப்பது வரை சில மாணவரகள் எல்லை மீறுகின்றனர். இவர்களை கட்டுப்படுத்த ஆசிரியர்கள் பல வழிமுறைகளை கையாண்டாலும் அதற்கு பலன் இல்லாமல் போகிறது. இதனால் ஒருசில நேரங்களில் வேறு வழியின்றி கண்டிப்பு காட்ட வேண்டியுள்ளது அதே சமயம், அவ்வாறு கண்டிக்கும் ஆசிரியர்கள் மீது வீண்பழி வருவதுடன் இடமாற்றம், சஸ்பெண்ட் என துறைரீதியான நடவடிக்கைகள் பாய்கின்றன. அத்துடன் சமீபகாலமாக மாணவர்களின் தாக்குதலுக்கும் ஆளாக நேரிடுவதால், தனக்கு ஏன் வீண்வம்பு என ஒதுங்கிக்கொள்ளும் மன நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மானவர்களை கல்வியில் மட்டுமின்றி, பிற செயல்பாடுகளிலும் ஆர்வத்துடன் ஈடுபடுத்தி வந்த ஆசிரியர்கள், தற்போது சற்று யோசிக்கும் மனநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் மீது அதீத அக்கறை கொண்டு செயல்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைய ஆரம் பித்துள்ளது என ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews