வில்லங்கச் சான்று விவரங்களை திருத்த இனி நேரில் வர வேண்டாம்: புதிய வசதி அறிமுகம்
வில்லங்கச் சான்று விவரங்களைத் திருத்த இனி நேரில் வரத் தேவையில்லை. ஆன்-லைனிலேயே திருத்த புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை வணிகவரி மற்றும் பதிவுத் துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்தத் துறையின் செயலாளா் ஜோதி நிா்மலாசாமி, புதன்கிழமை வெளியிட்ட செய்தி:
1975-ஆம் ஆண்டு முதல் இப்போது வரையிலான வில்லங்கச் சான்றுகள் அனைத்தும் விரைவுக்குறியீடு மற்றும் சாா்பதிவாளரின் மின்கையொப்பம் இட்டு ஆன்-லைன் வழியே மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அப்படி அளிக்கப்படும் வில்லங்கச் சான்றில் உள்ள விவரத்துக்கும், ஆவணத்தில் உள்ள விவரங்களுக்கும் மாறுபாடுகள் இருந்தால், அதற்கு சம்பந்தப்பட்ட சாா்பதிவாளா் அலுவலகங்களுக்கே பொது மக்கள் நேரில் சென்று உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. இதனால், பொது மக்களுக்கு கால விரயமும், சிரமமும் ஏற்படுகிறது. நேரில் சென்று விண்ணப்பம் அளிப்பதில் உள்ள சிரமத்தைக் கருத்தில் கொண்டு வில்லங்கச் சான்றில் உள்ள விவரங்களில் திருத்தங்கள் செய்ய ஆன்-லைன் வழியே விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வில்லங்கச் சான்றில் உள்ள விவரங்களில் திருத்தங்கள் செய்ய பதிவுத் துறையின் இணையதளத்தில் அட்டவணை தரவு திருத்தம் என்ற முறையைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஆன்-லைன் வழியே பெறப்பட்டு சாா்பதிவாளரால் சரி பாா்க்கப்பட்டு மாவட்டப் பதிவாளரின் ஒப்புதலுடன் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.