675 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு டிசம்பர் - 2021 மாத ஊதிய கொடுப்பாணை வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 31, 2021

Comments:0

675 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு டிசம்பர் - 2021 மாத ஊதிய கொடுப்பாணை வெளியீடு!

2010-11ஆம் ஆண்டில் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட 135 பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட 675 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு டிசம்பர் - 2021 மாத ஊதிய கொடுப்பாணை வெளியீடு!!

பள்ளிக்கல்வி - தற்காலிகப் பணியிடங்கள்- 2010-2011-ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 135 அரசு, நகராட்சி மற்றும் மாநகராட்சி அனுமதிக்கப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் 675 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தற்காலிகப் பணியிடங்களுக்கு டிசம்பர் 2021-ஆம் மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை வழங்குதல் - குறித்து.

பார்வை 1ல் காணும் அரசாணையில், 125 அரசு / நகராட்சி / மாநகராட்சி / உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்த அனுமதி அளித்தும், மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் 5 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 625 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ரூ.9300-34800.4800 தரஊதியம் என்ற ஊதிய விகிதத்தில் தற்காலிகமாக நிரப்பப்படும் நாள் முதல் ஒரு வருட காலத்திற்கு தோற்றுவித்தும் ஆணைகள் வெளியிடப்பட்டன.

2. பார்வை 2ல் காணும் அரசாணையில், 10 அரசு / நகராட்சி / மாநகராட்சி / உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்த அனுமதி அளித்தும், மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் 5 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 50 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ரூ.9300-34800.4800 தரஊதியம் என்ற ஊதிய விகிதத்தில் தற்காலிகமாக நிரப்பப்படும் நாள் முதல் ஒரு வருட காலத்திற்கு தோற்றுவித்தும் ஆணைகள் வெளியிடப்பட்டன.

3. பார்வை 3ல் காணும் அரசாணையில் மேற்காணும் பணியிடங்களுக்கு கடைசியாக 01.06.2018 முதல் 31.05.2021 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

4. மேற்காணும் தற்காலிக பணியிடங்களுக்கு 0106.2021 முதல் 3105.2024 வரை மேலும் மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்க பள்ளிக் கல்வி ஆணையர் அரசிற்கு கருத்துரு அனுப்பியுள்ளார். மேலும், தற்பொழுது, இப்பணியிடங்களுக்கு டிசம்பர் 2021-ஆம் மாதத்திற்கு ஊதியம் பெறத்தக்க வகையில் ஊதியம் வழங்க ஊதிய கொடுப்பாணையினை (Pay Authoritation) வழங்குமாறு பள்ளிக்கல்வி ஆணையர் அரசை கேட்டுக் கொண்டுள்ளார். 5. மேலே குறிப்பிட்டுள்ள தற்காலிக பணியிடங்களுக்கு 01.06.2021 முதல் 31.05.2024 வரை மேலும் மூன்றாண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்குவது குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில், இக்கடிதத்தின் இணைப்பில் கண்டுள்ள பணியிடங்களுக்கு டிசம்பர் 2021 ஆம் மாதத்திற்கான ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக ஊதிய கொடுப்பாணை (Pay Authorization) வழங்கப்படுகிறது. மேற்படி அலுவலர்களுக்கான டிசம்பர் 2021 ஆம் மாதத்திற்கான சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதியப் பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும்பட்சத்தில், அவை ஏனைய இனங்களில் சரியாக இருக்கும் நிலையில், ஏற்றுக் கொண்டு ஊதியம் பெற அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

6. இக்கடிதம் நிதித்துறையின் அ.சா.கு.எண்.58369/கல்வி-11/2021, நாள் 29.122021-ல் பெற்ற ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews