பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும் , கோவிட் பாதிப்புக்கு உள்ளானவர்களால் பிறருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பொது சுகாதாரத்துறை சட்டத்தில் தமிழக அரசு சட்டத்திருத்தம் செய்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:பொது இடங்கள் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். மார்க்கெட், தியேட்டர்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரிகளில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் .இது குறித்து பள்ளி, கல்லூரி, தியேட்டர்கள், மார்க்கெட், விளையாட்டு கூடங்கள், இதர பொழுதுபோக்கு இடங்கள் உள்ளிட்டவற்றின் உரிமையாளர்களுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொது இடங்களுக்கு வருபவர்கள் கோவிட் தடுப்பூசி செலுத்தி உள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என்று தலைப்பு இருக்க வேண்டும்.பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்கள் என்றால் பெருள்மாறுகிறது.அல்லவா?
ReplyDelete