Breaking

Wednesday, November 10, 2021

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க 20.11.2021 வரை கால அவகாசம் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு!!

பொருள்: அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை

-6 தேசிய திறனாய்வுத் தேர்வு ஜனவரி 2022 – பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க கோருதல் - சார்பு. பார்வை: இவ்வலுவலக இதே எண்ணிட்ட செய்திக்குறிப்பு நாள்: 30.10.2021

பார்வையில் காணும் செய்திக்குறிப்பில் நடைபெறவுள்ள ஜனவரி 2022 தேசிய திறனாய்வுத் தேர்விற்கு பத்தாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 08.11.2021 முதல் 13.11.2021 வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. தற்பொழுது விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யும் தேதி 20.11.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியினை பொதுமக்கள் அறியும் வகையில் தங்கள் பத்திரிக்கையில் செய்தியாக வெளியிடுமாறும் வாளொலி / தொலைக்காட்சியில் ஒலி / ஒளி பரப்பிடுமாறும் களியுடன் கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog