NAS - தேர்வு நடத்துவதை பள்ளிக்கல்வித்துறை கைவிட வேண்டும் - ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 10, 2021

Comments:0

NAS - தேர்வு நடத்துவதை பள்ளிக்கல்வித்துறை கைவிட வேண்டும் - ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!

3, 5, 8 வகுப்புக்களுக்குத் தேசிய அடைவுத் தேர்வு நடத்துவதை / பள்ளிக்கல்வித்துறை கைவிட வேண்டும்! / தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!

3, 5, 8 வகுப்புக்களுக்குத் தேசிய அடைவுத் தேர்வு நடத்துவதை பள்ளிக்கல்வித்துறை கைவிட வேண்டும்!

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்! தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் சமயில் வெளியீட்டுள்ள அறிக்கை:

கொரோனா பெருந்தொற்றுச் சூழலில் 19 மாதங்கள் கழித்து நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் 3, 5, 8 வகுப்புக்களுக்கு ஆரம்ப, அறிவிக்கப்பட்டுள்ள தேசிய அடைவுத்தேர்வை (NAS) பள்ளிக் கல்வித்துறை கைவிட வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

பெருந்தொற்றுக் காரணமாக 19 மாதங்கள் கழித்து ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பெருந்தொற்றின் தாக்கம் சற்றுத் தணிந்துள்ள நிலையில் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நவம்பர் 1 முதல் சுழற்சிமுறையில் வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன.

மாணவர்களின் பாதுகாப்பு, மாணவர்களின் கற்றல் இழப்பை ஈடுகட்டுதல், கற்றல் இடைவெளியைப் போக்குதல் ஆகிய பணிகளை மையப்படுத்தி ஆசிரியர்கள் தங்கள் கடமையை ஆர்வத்துடன் ஆற்றி வருகின்றனர். வரலாறு காணாத அளவிற்கு நீண்ட காலம் பள்ளிக்கு வருகை தர இயலாத நிலையில் இருந்த ஆரம்ப வகுப்புக்களின் மாணவச் செல்வங்களை பள்ளிச் கடினமான பணியாகும்.

சூழலுக்கு, கற்றல் சூழலுக்குக் கொண்டு வருவது என்பது மாண்புமிகு. முதலமைச்சர் அவர்கள் கூட தனது செய்தி வெளியீட்டில் "முதலிரு வாரங்களுக்கு மாணவர்களுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் ஊட்டும் வகையிலான கதை, பாடல், விளையாட்டு, வண்ணம் திட்டுதல், நினைவாற்றலை வளர்ப்பதற்கான உத்திகள் போன்றவற்றை வகுப்பறைகளில் வழங்குங்கள்" ஆசிரியர்களைக் கேட்டுக்கொண்டார். பள்ளிக் கல்வித்துறையும் அவ்வாறே உத்தரவிட்டுள்ளது. இத்தகு சூழ்நிலையில் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் திறந்து ஒரு வாரமே ஆகியுள்ள சூழலில் 3, 5, 8 வகுப்பு மாணவர்களுக்கு இம்மாதத்தில் தேசிய அடைவுத்தேர்வு (NAS) நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

என்பது முற்றிலும் பொருத்தமற்றதாக உள்ளது. 2019-20 ஆம் கல்வியாண்டில் முதல் வகுப்பில் சேர்ந்து அந்த வகுப்பிலேயே முழுமையாகப் படிக்கும் வாய்ப்புக் கிடைக்காமல், 2020-21 ஆம் கல்வியாண்டில் பள்ளிக்கே செல்வதற்கு வாய்ப்புக் கிடைக்காமல், 2021-22 ஆம் கல்வியாண்டில் 5 மாதங்கள் பள்ளிக்கு வர இயலாமல் தற்போது நேரடியாக மூன்றாம் வகுப்பிற்கு வந்துள்ள மாணவனுக்கும், இதேபோன்று தற்போது 5, 8 வகுப்புகள் பயிலும் மாணவர்களுக்கும் தேசிய அளவிலான அடைவுத் தேர்வு என்பது முற்றிலும் உளவியல் அணுகுமுறைக்கு மாறானதாகும். தேசிய அடைவுத் தேர்வு என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டாலும், அப்பள்ளிகளின் மாணவர்களும், மற்ற பள்ளிகளின் மாணவர்களைப் போலவே பெருந்தொற்றுக் காலத்தில் கற்றல் வாய்ப்பை இழந்தவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, 3, 5, 8 வகுப்புக்கான தேசிய அடைவுத் தேர்வை மாணவர்கள் நலன் கருதி பள்ளிக் கல்வித்துறை கைவிட வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews