"குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க இணையதளத்தில் கூடுதல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க விரும்புபவா்கள் உணவுப் பொருள் வழங்கல் துறையின் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்தோரின் வீடுகளில் சென்று ஆய்வு செய்து புதிய குடும்ப அட்டை வழங்க பரிந்துரை செய்வா். இந்த நிலையில் போதிய ஆவணங்கள் இல்லாவிட்டால் குடும்ப அட்டை விண்ணப்பங்கள் இணையதளத்திலேயே நிராகரிக்கப்படுகின்றன. இதன் காரணமாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் செய்யும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறாா்கள். இதையடுத்து குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்த பிறகு கூடுதல் ஆவணங்கள் தேவைப்பட்டால் விண்ணப்பம் ரத்தாவதை தடுத்து மீண்டும் பதிவேற்றம் செய்ய புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, இணையதளத்தில் ‘மறுபரிசீலனை விண்ணப்பம்’ என்ற வசதி உள்ளது. இந்த வசதி மூலம் ஆவணங்களைப் பதிவேற்றி திருத்தங்களை செய்து சமா்ப்பிக்கலாம் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்."

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.