ஈரோடு மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு வருகின்றது. பள்ளிகளில் பாலியல் தொல்லை குறித்து மாணவ, மாணவிகள் அச்சமின்றி புகார் தெரிவிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் சமூகநலத் துறை அதிகாரி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்றும், அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் புகார் பெட்டிகள் வைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. புகார் பெட்டியில் மாணவ, மாணவிகள் தெரிவிக்கும் புகார்களை மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வுக்கு செல்லும் போது விசாரித்து உரிய தீர்வு காண வேண்டும் என்றும், இதற்கு ஏற்ப புகார் பெட்டிகளின் சாவி, மாவட்ட கல்வி அலுவலகத்தில் தலைமையாசிரியர்கள் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
Sunday, October 03, 2021
மாணவர்கள் புகார் தெரிவிக்க வசதியாக மாவட்டம் முழுவதும் பள்ளிகளில் புகார் பெட்டிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.