Breaking

Saturday, October 16, 2021

வக்பு வாரியத்தில் இளநிலை உதவியாளர் பணி நவ.13-ல் ஆன்லைன் தேர்வு

வக்பு வாரியத்தில் இளநிலை உதவியாளர் பணி நவ.13-ல் ஆன்லைன் தேர்வு

திருச்சி தமிழ்நாடு வக்பு வாரியத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு நவ.13-ம் தேதி ஆன்லைன் மூலமாக தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வக்பு வாரிய முதன்மைச் செயல் அலுவலர் பரிதா பானு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு வக்பு வாரியத்தி காலியாக உள்ள 27 இளநிலை உதவியாளர் பணி யிடங்களுக்கான தேர்வு நவ. 13-ம் தேதி சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் ஆன் லைன் மூலமாக நடைபெறும்.

விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நபர்களுக்கு தேர்வுகூட நுழைவுச்சீட்டு, விண் ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இ-மெயில் முகவரிக்கும், இது குறித்த தகவல் விண்ணப்ப தாரரின் செல்போன் எண்ணுக் கும் அனுப்பப்படும். மேலும், விண்ணப் பங்கள் நிராகரிக்கப்பட்ட விவரமும் சம்பந்தப்பட்ட விண் ணப்பதாரர்களுக்கு குறுந் தகவலாக அனுப்பி வைக்கப் படும் என்று தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் எம்.அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog