'வடமாவட்ட அரசு பள்ளிகளுக்கு, தென் மாவட்டங்களில் இருந்து ஆசிரியர்கள் இடமாறுதல் செய்யப்படுவர்,'' என, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாரில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜானகி கலை, அறிவியல் கல்லுாரியில், ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின், அமைச்சர் அளித்த பேட்டி:ஏதாவது காரணத்தால், முகக் கவசம் அணியாமல் வரும் மாணவர்களுக்கு, பள்ளிக்குள் நுழையும் போதே முகக் கவசம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில், மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். கொரோனா கால பிரச்னைகளால், அந்த ஆசிரியர்கள் போதிய வருவாய் இன்றி தவிப்பதாக தகவல்கள் வருகின்றன.இதை கருத்தில் வைத்த தனியார் பள்ளிகள், தங்களின் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். மாணவர்களை கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என, எந்த பள்ளியும் வற்புறுத்த கூடாது. ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை, பள்ளிகளை திறப்பது தொடர்பாக, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மருத்துவக் குழுவினருடன் ஆலோசித்து, முதல்வர் உரிய முடிவை அறிவிப்பார்.
தென் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர் விகிதத்தை விட, அதிக ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால், வட மாவட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் தேவை உள்ளது. எனவே, தேவைப்படும் வட மாவட்ட பள்ளிகளுக்கு, தெற்கில் இருந்து ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.