போட்டித் தேர்வுகள்: தமிழ் பாடத்தாள் கட்டாயம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 13, 2021

Comments:0

போட்டித் தேர்வுகள்: தமிழ் பாடத்தாள் கட்டாயம்

அரசு பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் எனவும், பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

மனிதவள மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவரின் அறிவிப்புகள்:

* தமிழக அரசு பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்படும்.

* அரசுத்துறைகளில் 100 சதவீதம் தமிழக இளைஞர்கள் நியமனம் செய்ய, தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும். * வேலை வாய்ப்பகம் வழியாக நிரப்பப்படும் அரசு பணியிடங்களில் முதல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

* கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை .

* கொரோனாவால் அரசுப் போட்டித்தேர்வுகள் தாமதமானதால் போட்டித்தேர்வுகளில் நேரடி நியமன வயது உச்சவரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்படும்.

* பெண்களுக்கான ஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும்.

* தமிழக அரசு பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews