பள்ளி செல்லும் மாணவா்கள் நலன் கருதி தனி கல்வி வாரியம் அமைப்பது குறித்து புதுச்சேரி அரசு விரைவாகப் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா் நீதிமன்றத்தில் ஆா்.ஸ்ரீதா் என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘புதுச்சேரியில் தற்போது தமிழக அரசின் கல்வி முறையே பின்பற்றப்படுகிறது. புதுச்சேரியில் தனி கல்வி வாரியம் கிடையாது. எனவே 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கென பிரத்யேகமாக தனி கல்வி வாரியம் அமைக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தாா். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், புதுச்சேரியில் பள்ளி செல்லும் மாணவா்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு ஆரம்ப, இடைநிலைக் கல்வி, உயா் கல்விக்காக பிரத்யேகமாக ஒரு வாரியம் அல்லது தனி வாரியம் அமைப்பது மாணவா்களின் நலனுக்கு சிறப்பானதாக இருக்கும். இருந்தபோதும், இது குறித்து அரசு அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும் . தனி கல்வி வாரியம் அமைப்பது தொடா்பாக மனுதாரா், புதுச்சேரி அரசின் கல்வித்துறை செயலாளரிடம் புதிய கோரிக்கை மனுவை நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும்.
புதுச்சேரியில் காளான்கள் போல் பள்ளிகள் முளைத்து வருவதைக் கருத்தில் கொண்டும், அங்குள்ள மாணவா்களுக்கு பிரத்யேகமாக பாடத்திட்டம் அல்லது செயல் முறையை வழங்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டும்,
கல்வித்துறை செயலாளா் 12 வாரங்களில் பரிசீலித்து தகுந்த முடிவை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும். பள்ளி செல்லும் மாணவா்களின் நலனுக்காக, விரைவாக பொருத்தமான நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு எடுக்கும் என நம்புகிறோம். இம்மனு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.