ஆசிரியர் நியமன வயது வரம்பு அரசாணை ரத்து செய்ய ஐபெட்டோ வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 10, 2021

1 Comments

ஆசிரியர் நியமன வயது வரம்பு அரசாணை ரத்து செய்ய ஐபெட்டோ வலியுறுத்தல்

தமிழக ஆசிரியர் கூட்ட ணியின் மூத்த தலைவர் ஐபெட்டோ அண்ணா மலை, முதல்வர் ஸ்டாலி னுக்கு அனுப்பியுள்ள கடி தத்தில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டசபையில், 7ம்தேதி 110. விதியின் கீழ், முதல்வர் ஸ்டாலின், ஆசிரியர்கள், அரசுப் பணி யாளர் சங்கங்களின் கோரிக் கைகள் தொடர்பாக 13 அறிவிப்புகளை வெளியிட் டுள்ளதற்கு நன்றியையும், பாராட்டுகளையும் வித்துக் கொள்கிறோம்.

அதிமுக ஆட்சியில் 110 விதியின்கீழ் அனைத்து அறி விப்புகள் வெளியிடப்பட் டாலும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கை கள் இடம்பெற வாய்ப் பளிக்கப்படாமல் பிடிவாதமாக இருந்தனர். அதற்கு

மாற்றாக, தாயன்போடு முதல்வர், அரசு ஊழியர் கள், ஆசிரியர்களின் நலன் காக்கும் கோரிக்கைகளை அறிவிப்புகளாக வெளியிட் டுள்ளார்.

இந்நிலையில், அதிமுக அரசால் ஆசிரியர்கள் பணி நியமன வயது வரம்பை 57 லிருந்து 40,45 என நிர்ண யித்து வெளியிட்டுள்ள அர சாணையை ரத்து செய்து மத்திய அரசு போல்55 என நிர்ணயிக்க வேண்டும். ஏற் கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்று பணி நியமனத்திற்காக காத்திருக் கின்றனர். அவர்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் 40, 45 வயது முடிந்த வர்கள். எனவே, முந்தைய அரசாணையை ரத்து செய்துபள்ளிக் கல்வித்துறை நிர்வாக சீரமைப்பு என்ற பெயரால் தொடக்கக் கல் வித்துறை முற்றிலும் சீரழிக் கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் இருந்த அதிகாரங்களும் சிதறடிக்கப் பட்டுள்ளன.

அதனால், அதிமுக ஆட் சியில் வெளியான அர சாணை 101ஐ ரத்து செய்து தொடக்கக் கல்வித் துறை, பள்ளிக்கல்வித் துறை முந் தைய நடைமுறைப்படியே செயல்பட அறிவிக்க வேண்டும். இதற்கான அறி விப்புகளை 13ம் தேதி சட் டசபையில் 110 விதியின்கீழ் அறிவிக்கப்படும் என நம் பிக்கையுடன் காத்திருக்கி றோம்.

இவ்வாறு அவர் கூறியுள் ளார்.

1 comment:

  1. First ofall all teachers training institute may be closed due to
    un eployment teachers.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews