தமிழக அரசில் 1,095 பின்னடைவு காலிப்பணியிடங்கள் – சிறப்பு தேர்வு மூலம் நியமனம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 03, 2021

Comments:0

தமிழக அரசில் 1,095 பின்னடைவு காலிப்பணியிடங்கள் – சிறப்பு தேர்வு மூலம் நியமனம்!

தமிழக அரசின் 1,095 மாற்றுத் திறனாளர் பணியிடங்களுக்கு, சிறப்பு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

சிறப்பு தேர்வு:

தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு பட்ஜெட் தாக்கல் செய்ததை அடுத்து சட்டப்பேரவையில் துறை வாரியான விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற விவாதங்களில் அமைச்சர்கள் தாக்கல் செய்த அறிக்கைகள் மக்கள் வரவேற்கத்தக்க புதிய சிறப்பு திட்டங்கள் இடம் பெற்றுள்ளது. இதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. நேற்று நடைபெற்ற விவாதத்தில் 4 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படுவதன் மூலம் சுமார் 7000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று அமைச்சர் அன்பரசன் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கும் முக்கிய சிறப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. சட்டசபையில் கேள்வி நேரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு பணியில் 4 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்பட, அவர்களுக்கான பணியிடங்களை முதலில் கண்டறிய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் கூறினார். அப்போது பதிலளித்த சமூக நலத்துறை அமைச்சர், மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டப்படி, அவர்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீட்டின் படி பணிகள் வழங்கப்படுகின்றன.

மேலும் அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 1,095 பின்னடைவு பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுக்கு சிறப்பு தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். அரசுப் பணிகளில் சி, டி பிரிவில் அனைத்து பணியிடங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்ததாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏ, பி பிரிவிலும் 559 பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்தவை என கண்டறியப்பட்டுள்ளது என்று அமைச்சர் சட்டசபையில் தகவல் வெளியிட்டுள்ளார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews