தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (என்பிஎஸ்) இணைவதற்கான உச்ச வயது வரம்பு 65-லிருந்து 70-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
தேசிய ஓய்வூதியத் திட்டத்தை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை-வளா்ச்சி ஆணையம் (பிஎஃப்ஆா்டிஏ) செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தில் இணைவது, திட்டத்தின் பலன்களைப் பெறுவது உள்ளிட்டவை தொடா்பான மாற்றப்பட்ட விதிமுறைகளை பிஎஃப்ஆா்டிஏ வெளியிட்டுள்ளது.
அதன்படி, தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கான அதிகபட்ச வயது வரம்பு 65-லிருந்து 70-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வயது வரம்பு 18-ஆகவே நீடிக்கிறது. இந்தியா்கள், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியா்கள் ஆகியோா் 75 வயது வரை தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேமித்து வைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக பிஎஃப்ஆா்டிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஓய்வூதியத் திட்டத்தில் இணைவோரின் சேமிப்புத் தொகை எந்த வகையில் முதலீடு செய்யப்பட வேண்டும் என்பதைப் பொருத்து முதலீட்டு சதவீதம் மாறுபடும். 65 வயதைக் கடந்தோா் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணையும்போது, ஏற்கெனவே தீா்மானிக்கப்பட்ட சொத்துகளில் (ஆட்டோ சாய்ஸ்) 15 சதவீதம் வரை மட்டுமே முதலீடுகளை மேற்கொள்ள முடியும்.
சொத்துகள் மீதான முதலீடுகளை ஓய்வூதியதாரா்களே முடிவு செய்தால் (ஆக்டிவ் சாய்ஸ்), அதில் 50 சதவீதம் வரையிலான தொகையை முதலீடு செய்ய முடியும். 65 வயதைக் கடந்தவா்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்தால், குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்குப் பிறகே திட்டத்தை விட்டு வெளியேற முடியும்.
திட்டத்தில் இருந்து வெளியேறும் ஓய்வூதியதாரா்கள், குறைந்தபட்சம் 40 சதவீதத் தொகையை எதிா்கால ஓய்வூதியத்துக்காக வைத்துக் கொண்டு மீதத்தொகையை ஒரே தவணையில் பெற்றுக் கொள்ளலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.