B.Tech மாணவர்கள் ஒரேநேரத்தில் பொறியியலும் படிக்கலாம்: AICTE - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 15, 2021

Comments:0

B.Tech மாணவர்கள் ஒரேநேரத்தில் பொறியியலும் படிக்கலாம்: AICTE

பிடெக் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும்போதே ஒரேநேரத்தில் பொறியியலும் படிக்கலாம் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

புதிய தேசியக் கல்விக் கொள்கையில் உயர் கல்வியைப் பொறுத்தவரை நெகிழ்வான பாடத்திட்டங்கள், பாடங்களின் ஆக்கபூர்வமான சேர்க்கைகள், தொழிற்கல்வி ஒருங்கிணைப்பு, தேவைப்படும் நேரத்தில் படிப்பை நிறுத்தி பொருத்தமான சான்றிதழ் பெறுதல், மீண்டும் படிக்க விருப்பப்படும்போது எளிதான சேர்க்கை எனப் பரந்த அடிப்படையில் பன்முகத் தன்மையில் முழுமையான இளநிலை பட்டக்கல்வி ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்நிலையில் பொறியியல் படிப்புகளைக் கட்டுப்படுத்தும் ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் சார்பில், பிடெக் மாணவர்கள் தாங்கள் படித்துக் கொண்டிருக்கும்போதே ஒரேநேரத்தில் பொறியியலும் படிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலின்படி, ''ஏஐசிடிஇ நிர்வாகக் குழுவின் முன்னால் வைக்கப்பட்ட பரிந்துரைகளின்படி இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி தொழில்நுட்பப் பல்கலைக்கழங்கள் பிடெக் படிக்கும் மாணவர்களை, லேட்டரல் என்ட்ரி அடிப்படையில் தகுதியான பொறியியல் பிரிவில் சேர்த்துக் கொள்ளலாம். அதற்கு முன்னதாக மாணவர்கள் அதே பாடப் பிரிவை எடுத்துப் பார்க்க வேண்டியதில்லை. இதுதொடர்பாக உரிய மாற்றங்களைக் கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும்'' என்று ஏஐசிடிஇ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews