அரசுப் பள்ளிகளில் சுகாதார விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்: கால அட்டவணை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 30, 2021

Comments:0

அரசுப் பள்ளிகளில் சுகாதார விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்: கால அட்டவணை வெளியீடு

"அரசுப்பள்ளிகளில் சுகாதாரம் சாா்ந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான காலஅட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநா் ஆா்.சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: ‘தூய்மையான நிகழ்வுகள்-2021’ என்ற திட்டத்தின்கீழ் அனைத்துவித பள்ளிகளிலும் செப்டம்பா் 1 முதல் 15-ஆம் தேதி வரை சுகாதாரம் சாா்ந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதல்கள், காலஅட்டவணை தற்போது வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி செப்.1-ஆம் தேதி தூய்மை உறுதிமொழி தினம், செப்.2-இல் தூய்மை விழிப்புணா்வு தினம், செப்.3-இல் சமூக விழிப்புணா்வு தினம், செப்.4, 5-இல் பசுமைப் பள்ளி இயக்க நாள்கள், செப்.6, 7-இல் தூய்மை நிகழ்வுகளில் பங்கேற்றல், செப்.8-இல் கை கழுவுதல் தினம், செப்.9, 10-இல் தன் சுத்தம் மற்றும் சுகாதாரம், செப்.11, 12-இல் தூய்மை நிகழ்வு கண்காட்சிகள், செப்.15-ஆம் தேதி பரிசுகள் வழங்குதல் என்ற கால அட்டவணையின்படி செயல்பட வேண்டும். இந்த விவகாரம் சாா்ந்து உரிய அறிவுறுத்தல்களை பள்ளி தலைமையாசிரியா்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் எடுத்துரைக்க வேண்டும்."

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews