தமிழகத்தில் 2020-21 ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கைகளின் போது வெளியான அறிவிப்பின் படி அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உதவியாளர் / இளநிலை உதவியாளர்/ பதிவறை எழுத்தர் ஆகிய பணியிடங்களை அனுமதிக்காத பள்ளிகளுக்கு பணியிடங்களை உருவாக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி இணை இயக்குனர்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2020-21 ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கைகள் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்பின் படி அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் உதவியாளர் / இளநிலை உதவியாளர்/ பதிவறை எழுத்தர் ஆகிய பணியிடங்களை அனுமதிக்காத பள்ளிகளுக்கு பணியிடங்களை உருவாக்க அரசாணை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி 2019-2020 ஆம் ஆண்டில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உத்தேசமாக நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது 2021-2020 ஆம் கல்வியாண்டில் மேற்காணும் அரசாணையில் தெரிவித்துள்ளவாறு அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் பணியாளர்கள் நிர்ணயம் செய்வது குறித்தான பணிகள் EMIS இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால் கீழ் குறிப்பிட்டுள்ள விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விவரங்கள்: 1. தற்போது பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களின் எண்ணிக்கை
2. அனுமதிக்கப்பட்ட உதவியாளர்/ இளநிலை உதவியாளர்/ பதிவறை எழுத்தர் பணியிடங்கள்
3. பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.