தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து, படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக வெளியான அரசின் அறிவிப்புக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள் மற்றும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
உதவித்தொகை:
தமிழக அரசு மக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இதேபோல் படித்த மற்றும் வேலை இல்லாத இளைஞர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு உதவித்தொகை வழங்குவதாக வெளியான அறிவிப்பிற்கு விண்ணப்பிக்கும் சிவகங்கை மாவட்ட இளைஞர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது அதனை தொடர்ந்து புதுப்பித்திருப்பதும் அவசியமாகும். இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் வயது வரம்பு ஆதிதிராவிடர் , பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமல், மற்றவர்களுக்கு 40 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகிறது. விண்ணப்பதாரர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72,000 க்கு மிகாமல் இருப்பதும் அவசியமாகிறது. தொலைதூரக்கல்வி மற்றும் அஞ்சல் வழியாக கல்வி கற்ற மாணவர்களும் உதவித்தொகை பெறுவதற்கு தகுதியானவர்களே. அனைத்து தகுதிகளையுடைய இளைஞர்கள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு நல அலுவலகத்துக்கு சென்று கட்டணமின்றி விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்த தகுதியான இளைஞர்கள் பட்டதாரிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். முறையாக 9ம் வகுப்பு முடித்தும், 10ம் வகுப்பில் தோல்வி அடைந்த இளைஞர்களுக்கு மாதம் 200 மற்றும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாய், மேல்நிலை கல்வியை முடித்தவர்களுக்கு 400 ரூபாய் மற்றும் பட்டதாரிகளுக்கு 600 ரூபாய் வழங்கப்படுகிறது. இவ்வாறு வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு 3 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.