டெல்லி, கர்நாடகா, மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு, அசாம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பள்ளிகள் திறப்பது குறித்து மாநில அரசு முடிவெடுத்துள்ள நிலையில், அதனை பற்றிய அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.
பள்ளிகள் திறப்பு:
பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பது குறித்து பல மாநில அரசுகள் சமீபத்தில் அறிவித்து வருகின்றது. இந்நிலையில் பல மாநிலங்களில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு விட்டது. நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள மாநிலங்களில் உயர் வகுப்பு மாணவர்கள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளனர். ஆனால் நிபுணர்கள் சிறிய வகுப்பு மாணவர்களுக்கு முதலில் நேரடி வகுப்புகளை தொடங்க அறிவுறுத்துகின்றனர். மாநில வாரியாக பள்ளிகள் திறப்பது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கேரளா:
கோவிட் -19 க்கு எதிராக மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு, படிப்படியாக பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து கேரள அரசு முடிவெடுக்கும் என்று அறிவித்துள்ளது. இருப்பினும், பள்ளிகளை மீண்டும் திறப்பது மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட கோவிட் -19 நிபுணர் நிறுவனங்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்று பொது கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி கடந்த திங்கள்கிழமை அறிவித்தார். டெல்லி:
நடப்பாண்டு பொதுத்தேர்வுக்கான சேர்க்கை தொடர்பான வேலை, ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் நடைமுறை தொடர்பான வேலைகளுக்காக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, பெற்றோரின் ஒப்புதல் கடிதம், புத்தகம் மற்றும் பேனா போன்ற பொருட்களை பகிர்வதை தவிர்த்தல், பள்ளிகளை சுத்திகரித்தல் மற்றும் உடல் வெப்ப நிலை சோதனை போன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
அசாம்:
அசாம் மாநிலத்தில் பள்ளிகள் செப்டம்பர் 1 ம் தேதி மீண்டும் திறக்கப்படலாம் என்று கல்வி அமைச்சர் ரனோஜ் பெகு அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 6 ஆம் தேதி, கல்வி அமைச்சர் 2021-22 கல்வி ஆண்டின் 10 மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்களின் அகமதிப்பெண்களை அறிவிக்கும் போது பள்ளிகள் திறப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.
ராஜஸ்தான்:
ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி திறக்கும் தேதி மற்றும் இயல்பு குறித்து முடிவு செய்வதாக அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்தார். ஆனால் தற்போது வரை, ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி மீண்டும் திறப்பது குறித்து எந்த தகவலும் இல்லை. மேற்கு வங்கம்:
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஜூலை 5 அன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறக்க மாநில அரசு பரிசீலித்து வருவதாக கூறினார். மாநிலத்தில் துர்கா பூஜை விடுமுறை நாட்களுக்கு பிறகு கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படலாம் என்று முதலமைச்சர் கூறினார். மேலும், பள்ளிகள் மாற்று நாட்களில் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு:
தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளை தமிழக அரசு பள்ளிகளை மீண்டும் தொடங்க உள்ளது. மேலும், ஆகஸ்ட் 16ம் தேதி முதல் மாநிலத்தில் மருத்துவக் கல்லூரிகளை மீண்டும் திறக்க அனுமதி அளித்துள்ளது. மேலும், 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு 50 சதவிகித மாணவர்களுடன் கோவிட் -19 பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றி மீண்டும் பள்ளிகளைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகா:
கர்நாடக பள்ளிகள் ஆகஸ்ட் 23 ஆம் தேதி 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மீண்டும் திறக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் பணிக்குழு, மருத்துவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஆலோசித்து அவர்களின் கருத்துக்களை பரிசீலித்து முடிவு செய்யப்பட்டுள்ளதாக தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளி கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் ஆகஸ்ட் 9 ஆம் தேதி அறிவித்தார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.