தமிழகத்தில் ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆயுட்காலம் வரை செல்லும் என அரசு அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வு:
தமிழகத்தில் ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் பணியில் சேர ஆசிரியர் தேர்வாணையத்தால் டெட் எனும் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் வழங்கப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்வாணையத்தால் தகுதி சான்றிதழ் வழங்கப்படும். இது 7 ஆண்டுகள் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த வருடங்களில் நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற ஏராளமான ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. மேலும் இவர்களின் சான்றிதழ் செல்லுபடி காலமும் காலாவதி ஆகிவிட்டது. இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் கடந்த மே மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி சான்றிதழ்கள், இனி ஆயுள் முழுதும் செல்லும் என அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் தமிழக அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய, ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழுக்கு இன்னும் ஆயுள் கால அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கான எந்த அறிவிப்புகளையும் தற்போது வரை அரசு வெளியிடவில்லை. இது குறித்து தேர்வு எழுதிய ஆசிரியர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில் தமிழக அரசு கால தாமதம் செய்வது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த 7 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் பணியில் சேர முடியாதது அவர்களின் தவறு அல்ல, அரசின் தவறு தான். எனவே தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆயுட்காலம் வரை செல்லும் என அரசு அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Thank you sir
ReplyDelete