பள்ளிகள் திறப்பது குறித்து, முதல்வர் ஒரு மாதிரியான கருத்தும், தொடக்க கல்வி துறை அமைச்சர் மற்றொரு விதமான கருத்தும் கூறுவதால், மாணவர்களும், பெற்றோரும் குழப்பம் அடைந்துள்ளனர்.
கர்நாடகாவில், வரும், 23 முதல், 9, 10 ம் வகுப்பு மற்றும் பி.யு.சி., வகுப்புகள் ஆரம்பிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் அதிகளவில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதால், அப்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு தீர்மானிப்பதாக முதல்வர் பசவராஜ் பொம்மை மங்களூரில் தெரிவித்தார்.
இதற்கிடையில், தொடக்கக் கல்வித் துறை அமைச்சர் நாகேஷ், பெங்களூரில் கூறியதாவது: வரும், 23 முதல் ஆரம்பிக்கப்படவுள்ள வகுப்புகளுக்கு, இன்று விதிமுறைகள் அறிவிக்கப்படும். ஒன்றாம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலும் ஆரம்பிக்கும்படி பெற்றோர் அழுத்தம் கொடுக்கின்றனர். செப்., முதல், திறப்பதற்கு அரசு ஆலோசிக்கிறது. இது தொடர்பாக, வரும், 30ல், முதல்வர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். முதல்வர் ஒரு மாதிரியான கருத்தும், தொடக்கக் கல்வித் துறை அமைச்சர் மற்றொரு விதமான கருத்தும் கூறுவதால், மாணவர்களும், பெற்றோரும் குழப்பம் அடைந்துள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.