தமிழில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்வி அறிமுகம் : அமைச்சர்
தமிழ் வழியில் பயிலும் மாணவர்களின் வசதிக்காக, தமிழில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்வி அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உரையாற்றினார். *அதன் முக்கிய அம்சம் வருமாறு:*
கிருஷ்ணகிரியில் தோட்டக்கலை கல்லூரி புதிதாக தொடங்குவதற்கு முதற்கட்ட நிதியாக ரூ.10 கோடி ஒதுக்கீடு. தமிழ் வழியில் பயிலும் மாணவர்களின் வசதிக்காக தமிழில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்வி அறிமுகம். திருச்சி- நாகை மாவட்டத்திற்கு இடையேயான பகுதி வேளாண் தொழிற்சாலைகளுக்கான பெருந்தடமாக (Agro Industrial Corridor) அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு கூறிய அமைச்சர், கடைசியாக, “வாழ்க தமிழகம், வளர்க வேளாண்மை” என்று கூறி வேளாண் நிதிநிலை அறிக்கை உரையை முடித்தார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.