நிதி நெருக்கடியில் உள்ள, 41 கல்லுாரிகளின் ஊதிய செலவை, அரசு ஏற்க வேண்டும் என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
பல்கலை உறுப்பு கல்லுாரிகளாக மாற்றப்பட்ட, 41 கல்லுாரிகளில் பணியாற்றுவோரின் ஊதியத்தை, சம்பந்தப்பட்ட பல்கலை வழங்க வேண்டும் என்ற, தமிழக அரசின் உத்தரவு, விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
தமிழகத்தில் உள்ள பல்கலைகள் அனைத்தும், கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கின்றன.
இதில், பாரதிதாசன் பல்கலை தான் அதிகபட்சமாக, 10 உறுப்பு கல்லுாரிகளை நடத்தி வந்தது. அவை, அரசு கல்லுாரிகளாக மாற்றப்பட்டுள்ளன.
அக்கல்லுாரி பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க, மாதம், ௧ கோடி, 51 லட்சம் ரூபாய் தேவை. பாரதிதாசன் பல்கலை பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க, ஆக., மாதத்திற்கு மட்டும், 8.93 கோடி ரூபாய் தேவை. பல்கலையில் இருப்பு உள்ள தொகை, 6 கோடி, 52 லட்சம் ரூபாய் மட்டும் தான். அதனால், 10 அரசு கல்லுாரிகளின் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாது என, அரசுக்கு பதிவாளர் கடிதம் எழுதி விட்டார். இத்தகைய சூழலில், 41 அரசு கல்லுாரிகளின் ஊதியச் செலவை அரசு ஏற்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
சுற்றுலா தலம்
ராமதாசின் மற்றொரு அறிக்கை:
கங்கையும், கடாரமும் கொண்ட தமிழ் மன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த, ஆடி திருவாதிரை நாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என, அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அரியலுார் மாவட்ட மக்களின், நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது வரவேற்கத்தக்கது. கம்போடியாவின் புகழ்பெற்ற அங்கோர்வாட் ஆலயத்திற்கு இணையாக, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோவிலையும், தஞ்சாவூர் பெரிய கோவிலையும், இரட்டை சர்வதேச சுற்றுலா தலங்களாக மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கண்டிக்கிறோம்.வன்மையாக கண்டிக்கிறோம்.சாதி கட்சி நடத்திக் கொண்டு மற்ற இன மக்களின் சமூக பொருளாதார வாய்ப்புகளை சுரண்டும் ராமதாசை வன்மையாக கண்டிக்கிறோம்.
ReplyDelete