ஒடிசா மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகளை தொடங்குவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
நேரடி வகுப்புகள்:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாக கடந்த கல்வி ஆண்டு முதல் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படவில்லை. ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடந்து வருகின்றது. மேலும், நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதன் விளைவால் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் பல மாநில அரசுகள் பள்ளிகளை திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது.
ஒடிசாவில் ஜூலை 26 முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பள்ளிகளை மீண்டும் திறக்க மாநில அரசு முடிவு செய்தது. ஒடிசாவின் பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை செயலாளர் சத்யபிரதா சாஹு, ஆன்லைன் வகுப்புகள் மூலமாக 40% மாணவர்கள் மட்டுமே கற்றல் நிலையை அடைகின்றனர். மீதம் உள்ள 60% மாணவர்களால் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே, ஜூலை 26 முதல், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தனியார் மற்றும் அரசு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவித்தார். வகுப்புகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடத்தப்படுகிறது. TN Job “FB Group” Join Now மேலும் செப்டம்பர் 15 முதல் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை மீண்டும் திறக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது ஆகஸ்ட் 9ம் தேதி முதல் அனைத்து பிஜி/ யுஜி/ டிப்ளமோ/ ஐடிஐ திட்டங்களின் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள், பொறியியல் மற்றும் தொழில்முறை கல்லூரிகள்/ பாலிடெக்னிக் & டிப்ளமோ நிறுவனங்கள் மற்றும் ஐடிஐ ஆகியவற்றில் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.