2021 நீட் தேர்வுக்கு தமிழகத்தில் 11,236 மாணவர்கள் விண்ணப்பம் – தமிழக அரசு தகவல்!
தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்படும் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு வருகிற செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் இருந்து நடப்பாண்டு தேர்வுக்கு 11236 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு:
இந்திய அளவில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் நீட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் இத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வழங்கப்படும். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு விண்ணப்ப பதிவு ஜூலை 13 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. முன்னதாக ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு தேசிய தேர்வு முகமை அறிவித்தது. ஆகஸ்ட் 11ம் தேதி முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் இருப்பின் அதனை செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நீட் தேர்வு கூடுதல் மையங்களில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் விவரங்கள் குறித்து அரசு தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் நடப்பாண்டில் நீட் தேர்வுக்கு 11236 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தேர்வுக்கு சுமார் 8,300 பேர் விண்ணப்பித்திருந்தனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தமிழகத்தில் சுமார் 3000 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.