தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது கல்லூரிக் கல்வி இயக்ககம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 24, 2021

Comments:0

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது கல்லூரிக் கல்வி இயக்ககம்.

பார்வையில் காணும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் இன்று (23.08.2021) 12.00 மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில் கல்லூரி திறப்பது குறித்து கீழ்க்காணுமாறு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து கல்லூரிகளும் கட்டாயம் பின்பற்றுமாறு தெரிவிக்கலாகிறது.

1. அனைத்து கல்லூரிகளும் தங்கள் கல்லூரிகளில் உள்ள அனைத்து வகுப்பறைகள், நாற்காலிகள், விளையாட்டு கருவிகள், ஆய்வகங்கள் போன்றவற்றை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

2. கட்டாயமாக அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் இரு தவணை தடுப்பூசிகளையும் போட்டிருக்க வேண்டும். தடுப்பூசி போடாத பணியாளர்கள் (ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள்) கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர்.

3. தடுப்பூசி போடப்பட்டவர்களின் (மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள்) விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறும், அரசு கோரும் போது உடன் வழங்குமாறும் தெரிவிக்கப்படுகிறது.

4. கோவிட் 19. சிகிச்சை மையமாக உள்ள கல்லூரிகள் இணையவழி வகுப்புகளையே தொடர நாளை (24.08.2021) நடைபெற உள்ள கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

5. பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் கூட்டி பெற்றோர்களின் ஆலோசனையை பெறல் வேண்டும். 6. சுகாதாரத் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு தடுப்பூசி போடாதவர்களுக்கு, கல்லூரியிலேயே தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும்.

7. நோய் தொற்று அறிகுறி உள்ள மாணவர்களை கண்டறிந்தால், உடன் அவருடன் தொடர்பிலிருந்த அனைவருக்கும் RT-PCR Test எடுக்க வேண்டும்.

8. மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்லூரிக்கு வருகை தர அவசியமில்லை.

9. கல்லூரி வளாகத்தினுள் பயன்படாத பிளாஸ்டிக் கப்புகள், தேநீர் கப்புகள், டயர்கள், விஷ ஜந்துக்கள் தஞ்சமடையும் இடங்களை உடன் அப்புறப்படுத்த வேண்டும்.

10.நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் வழிகளில் கண்காணிப்பு குழு அமைத்து SOP முறை பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

11. சுத்தமான குடிநீர் வசதியினை மாணவர்களுக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும்.

12. மேலும், தகவல்களுக்கு அரசால் வெளியிடப்பட்ட SOP ஆணையை பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டது.

13.கல்லூரி துவங்குவதற்கு வார காலத்திற்கு முன்னதாகவே கல்லூரி வளாகத்தினை சுத்தம் செய்திட முன்னேற்பாடுகளை செய்திடுமாறு தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews