ஆதிதிராவிடர் பள்ளிகளுக்கு ரூ.123 கோடி ஒதுக்கீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 20, 2021

Comments:0

ஆதிதிராவிடர் பள்ளிகளுக்கு ரூ.123 கோடி ஒதுக்கீடு!

''ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில், காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின், மாநில உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம், நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. அதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:தி.மு.க., அரசு, ஆதிதிராவிடர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. கல்வி வேலைவாய்ப்பில், அவர்கள் உரிய இடங்களைப் பெற வேண்டும்.

சமூக அமைப்பில், எந்த சூழலிலும், அவர்கள் புறக்கணிக்கப்படக் கூடாது.ஜாதியை காரணம் காட்டி, அவர்கள் வளர்ச்சி தடுக்கப்படக் கூடாது. அரசியல், பொருளாதாரம், கல்வி ஆகிய அனைத்து மட்டங்களிலும், அவர்கள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். 'சூ மந்திரகாளி' என்பதைப் போல, நாளையே இவை எல்லாம் நடந்து விடும் என்று நினைக்கவில்லை. ஆனால், ஒவ்வொரு நாளும் இந்த இலக்கை அடைவதற்கான துாரம் குறைக்கப்பட வேண்டும். கல்வி, பொருளாதாரம், நாகரிகம் வளர்ந்தாலும், ஜாதி, தீண்டாமை ஏற்றத்தாழ்வுகள் அப்படியே இருக்கின்றன.அதில் மாற்றம் செய்ய, இன்னும் பல ஆண்டு காலம் கடக்க வேண்டும் என்றே தெரிகிறது.இதை சட்டத்தின் வழியே, ஓரளவு சரி செய்ய முடியும். அத்தகைய சட்டங்கள் முறையாக பயன்படுத்தப்பட வேண்டும்.

தீண்டாமை குற்றம் இழைத்தவர் தப்பி விடக்கூடாது. அதே நேரத்தில், சட்டத்தை யாரும் தவறாக பயன்படுத்தி விடக் கூடாது.ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வு கூடங்கள் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 'நபார்டு' வங்கி நிதியத்தின் கீழ், 123 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews