10 மற்றும் 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கான தேதியை தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகளில் பயிலும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி செய்யப் பட்டனர். அதே போல் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10, 11ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு அடிப்படையில் இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை 19ஆம் தேதி வெளியானது.
அதேநேரம் தனித்தேர்வர்களுக்கு ப்ளஸ் 2 தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது . அதன்படி தனித் தேர்வர்களுக்கான ப்ளஸ் 2 துணைத் தேர்வு நேற்று ( 06.08.21 ) தொடங்கி 19 ஆம்தேதி வரை நடைபெறுகிறது . இந்நிலையில் தற்போது 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு துணை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
11 ஆம் வகுப்பு துணை தேர்வு செப்டம்பர் 15 முதல் 30 ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இன்று முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது .

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.