தமிழகத்தில் செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு – 1.23 கோடி ரூபாய் நோய் தடுப்பு பணிக்கு ஒதுக்கீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 25, 2021

Comments:0

தமிழகத்தில் செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு – 1.23 கோடி ரூபாய் நோய் தடுப்பு பணிக்கு ஒதுக்கீடு!

தமிழகத்தில் செப் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து நோய் தடுப்பு பணிக்கு ரூ 1.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரூ 1.23 கோடி ஒதுக்கீடு:

கொரோனா தொற்று தீவிரமாக விதித்ததை தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. தற்போது நோய் தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால் பள்ளிகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகள் திறக்கப்படுவது காரணமாக பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள 6,177 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ 2,000 வீதம் ரூ 1.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பயிலும் 6,177 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மட்டும் வரும் 1ம் தேதி திறக்கப்பட உள்ளது. மாணவர்கள் எந்தவித பயமும் இன்றி பள்ளிக்கு வருவதை உறுதிப்படுத்தும் வகையிலும், மகிழ்வுடனும், பாதுகாப்பு உணர்வுடனும் கல்வி கற்கும் சூழலை மாணவர்களிடையே ஏற்படுத்த வேண்டும். இதற்காக 6,177 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி வளாகம், வகுப்பறைகள் மற்றும் மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் கழிவறைகள் போன்றவற்றை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிக்கு பள்ளி ஒன்றுக்கு ரூ 2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ 1.23 கோடி நிதி பரிந்துரைக்கப்படுகிறது.இவற்றில் முதற்கட்டமாக பள்ளி ஒன்றுக்கு ரூ 1,000 வீதம் 6,177 பள்ளிகளுக்கு மொத்தம் ரூ 61.77 லட்சம் மட்டும் விடுவிக்கப்படுகிறது. இந்த நிதியினை முறையாக செலவு செய்ய வேண்டும். மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிஇஓ, டிஇஓ, பிஇஓ, ஏடிபிசி, ஏபிஓ, இடிசி மற்றும் பிஆர்டிஇ ஆகியோர் பள்ளிகள் தூய்மை செய்யப்பட்டதை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

அனைத்து பள்ளிகளையும் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். இந்த நிதி மூலம் கொள்முதல் செய்யப்படும் பொருட்களை கொண்டு, பள்ளி வளாகம், வகுப்பறைகள் மற்றும் கழிவறைகளை, பள்ளிகள் திறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக ஒரு பொறுப்பு ஆசிரியரை நியமித்து மேற்பார்வையிட செய்ய வேண்டும். சுகாதாரத் துறை வாயிலாக வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews