வைப்பு நிதி அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் தங்களது PF கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலமாக அனைத்து அரசு மற்றும் சில அமைப்பு சார்ந்த தனியார் நிறுவங்களின் பணிபுரிவோருக்கு எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும் வகையில் அவர்களது மாத சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு சேமிக்கப்படும். இந்நிலையில் அவ்வாறு சேமிக்கப்பட்ட PF தொகையை மருத்துவம், திருமணம், சொந்த வீடு வாங்குதல் போன்ற காரியங்களுக்கு எடுத்து கொள்ளலாம். அவ்வாறு எடுக்காவிட்டால் அவர்களது ஓய்வூதியத்திற்கு பின்னர் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். இந்நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் PF கணக்குடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும். அவ்வாறு இணைக்காவிட்டால் பின்பு PF தொகை எடுப்பதில் சிக்கல் ஏற்படும். ஏற்கனவே ஜூன் 1 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக செப்டம்பர் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. PF ரிட்டன் தாக்கல் செய்தவர்களுக்கும் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களும் ஆதார் அட்டையை PF கணக்குடன் இணைக்க வேண்டும். இல்லையென்றால் PF தொகை பெற பல சிக்கல் ஏற்படும். கொரோனா காரணமாக பலர் PF தொகையை எடுத்து வருகின்றனர். பேரிடர் காலம் என்பதால் அதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது PF தொகையை எடுத்தால் அதன் பலன்கள் குறைவாக மட்டுமே கிடைக்கும். எனவே நிதி நெருக்கடியை வேறு வழியில் சமாளிக்க திட்டமிட வேண்டும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.