EPFO பயனர்கள் கவனத்திற்கு – அவசர காலத்தில் பணம் எடுப்பதற்கான காரணங்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 10, 2021

Comments:0

EPFO பயனர்கள் கவனத்திற்கு – அவசர காலத்தில் பணம் எடுப்பதற்கான காரணங்கள்!

வருங்கால வைப்பு நிதி (PF) மூலம் பணத்தை சேமித்து வைத்தவர்கள் தங்களது அவசர காலத்தில் அவற்றை எடுத்து உபயோகப்படுத்துவதற்கு உதவியாக சில காரணக்கூறுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை பயன்படுத்தி PF பயனர் ஒரு குறிப்பிட்ட தொகையுடன் சில சலுகைகளையும் அறிவித்துள்ளது.


PF திரும்ப பெறுதல்

பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது மாத சம்பளம் பெறும் ஊழியர்கள் அனைவருக்கும் அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் சிறந்ததொரு திட்டமாகும். வழக்கமாக மாத சம்பளம் பெறும் பணியாளர்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 10% சேமிப்புக்காக வழங்க வேண்டும். இப்பணம் ஒவ்வொருவரது வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) செலுத்தப்படும். பொதுவாக, ஒரு EPF கணக்கில் செலுத்தப்பட்ட மொத்த தொகையின் ஒரு பகுதியை அந்த பணியாளர் ஓய்வு பெறும் போது அல்லது ராஜினாமா செய்யும் போது திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் சில நெருக்கடியான நேரங்களை எதிர்கொண்டு வரும் EPF வாடிக்கையாளர்கள் தற்போது EPF தொகையில் ஒரு பகுதியை திரும்பப் பெற அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி பயனர் ஒருவருக்கு கொரோனா தொற்று காரணமாக நிதி சிக்கல்கள் ஏற்பட்டால், மத்திய அரசு அறிவித்துள்ளபடி, EPF நிலுவைத் தொகையில் இருந்து அவரது மூன்று மாத அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி, அல்லது கணக்கில் நிலுவையில் உள்ள 75% தொகையை முன்கூட்டியே பெறலாம். இந்த பணத்தை EPF கணக்கில் மீண்டும் டெபாசிட் செய்ய வேண்டியதில்லை.

வேலையின்மையை பொருத்தளவு, EPF பயனர் ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் வேலையில்லாமல் இருந்தால் அவர்கள் PF கணக்கில் இருந்து 75% வரைபெற்றுக்கொள்ளலாம். இந்த நேரத்தில் நாம் கிளைம் செய்யும் மொத்த தொகையை பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் 3 நாட்களாக EPFO குறைத்துள்ளது. அதே நேரத்தில் ஒரு ஊழியர் தனது வேலையை மாற்றினால் EPF கணக்கை, ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்ற முடியும். மேலும் EPF கணக்கு ஆண்டுதோறும் 8.5% வருவாயை அளிக்கிறது குறிப்பிடத்தக்கது. EPF EDLI திட்டத்தின் கீழ் ஒரு வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பவர் கொரோனா உட்பட எந்தவொரு காரணத்தினாலும் இறக்க நேரிட்டால், அந்த ஊழியரின் வைப்புத்தொகையானது இணைக்கப்பட்ட காப்பீட்டு (EDLI) திட்டத்தின் ஒரு பகுதியாக அவரது குடும்பத்திற்கு கொடுக்கப்படும். இவற்றில் அதிகபட்சமாக ரூ.7 லட்சம் வரையும் குறைந்தபட்சமாக ரூ.2.5 லட்சம் வரை பெற்றுக்கொள்ள முடியும் என EPFO தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில், பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC) ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு நன்மைகளை அளிக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் கொரோனா காரணமாக உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அதாவது கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட மற்றும் தாராளமயமாக்கப்பட்ட காப்பீட்டு இழப்பீடு மற்றும் பணியாளர் வைப்புடன் இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் (EDLI) ஆகியவை கிடைக்கும். தவிர ESIC ன் கீழ் ஓய்வூதியத்தின் பல நன்மைகளையும், காப்பீட்டுத் திட்டத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews